பாலிவுட்டில் பிஸியான தயாரிப்பாளராக வலம்வரும் போனி கபூர், தமிழில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்துவருகிறார். இவ்விரு படங்களின் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில், நேற்று (22.10.2021) சென்னைக்கு வருகை தந்த போனி கபூர், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பில், ‘நெஞ்சுக்கு நீதி’ படம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.