நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத்தான் இயக்குகிறார். போனி கபூர்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thala-60_2.jpg)
இப்படத்திற்கான கதை விவாதங்கள் அனைத்தும் முடிவுபெற்று, நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.இதனிடையே இந்தப் படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு குறித்து பல்வேறு விளம்பரங்கள் இணையத்தில் வெளியானதாகத் தெரிகிறது. இதற்குப் படக்குழுவினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போனிகபூர் தரப்பு வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போனி கபூர் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து எந்தவொரு விளம்பரத்தையுமே அளிக்கவில்லை. அவ்வாறு வெளியாகியுள்ள விளம்பரங்களுக்கு எங்கள் நிறுவனமோ, போனிகபூரோ பொறுப்பேற்க முடியாது. அந்த விளம்பரங்களுக்கும் போனி கபூருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல" என்று எச்சரித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)