அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவான 'நேர்கொண்ட பார்வை' படம் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து அப்பட தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது....

Advertisment

boney kapoor

''அஜித்தின் அடுத்த படத்திற்கான வேலைகளுக்காக ஐரோப்பாவிற்கு சென்றுள்ளார் இயக்குனர் எச்.வினோத். நானும் தற்போது அங்கு செல்லவிருக்கிறேன். சில லொகேஷன்கள் பார்க்கவும், தொழில்நுட்ப கலைஞர்களை முடிவு செய்யவும் அங்கு செல்லவிருக்கிறேன். அநேகமாக ஆகஸ்ட் 29ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறும். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்புகிறேன். அந்த படம் ரசிகர்களாகிய நீங்கள் எதிர்பார்த்தபடி பக்கா கமர்ஷியல் அம்சங்களோடு ரசிக்கும்படியான படமாக இருக்கும்'' என்றார்.