Advertisment

‘வலிமை’ என்ன மாதிரியான படம்? பதிலளித்த போனி கபூர்!

Boney Kapoor

இயக்குநர் எச்.வினோத் வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் படத்தின் பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d17f21f9-cdc0-47a0-ad33-f03416ddbeec" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Kadan-article-inside-ad_3.png" />

Advertisment

இந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் போனி கபூரிடம் எந்த வகையிலான திரைப்படமாக ‘வலிமை’ இருக்கும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த போனி கபூர், "அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த, குடும்பப் பின்னணி கொண்ட திரைப்படமாக ‘வலிமை’ இருக்கும். இப்படத்திற்காக அஜித் கடினமாக உழைத்தார். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் திருப்திகரமான படமாகவும் இருக்கும்" எனக் கூறினார்.

valimai Boney kapoor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe