/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/54_19.jpg)
இயக்குநர் எச்.வினோத் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் படத்தின் பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. பிற நடிகர்களின் படம் குறித்த அப்டேட் வெளியாகும்போது, ‘வலிமை’ அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கேள்வியெழுப்பவது வழக்கம். ஆனால், இதுவரை தயாரிப்பு தரப்பு படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தது. இதனால், விரக்தியடைந்த அஜித் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமுக வலைதளங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த போனி கபூர், ‘வலிமை’ படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில், ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 15-ஆம் தேதி நிறைவடைய இருப்பதாகவும், இன்னும் படமாக்கப்படவேண்டியுள்ள ஒரு சண்டைக்காட்சியை விரைவில் வெளிநாட்டில் படமாக்க உள்ளதாகவும் கூறினார். படத்தின் பின்தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன எனக் கூறிய போனி கபூர், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனக் கூறினார்.
இதனையடுத்து உற்சாகமான அஜித் ரசிகர்கள், இத்தகவலை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)