'தல 61' படம் குறித்து பகிர்ந்த போனி கபூர்!

Boney Kapoor

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இது, ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு அஜித் - போனி கபூர் - எச். வினோத் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாகும். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

இப்படத்தைத் தொடர்ந்து, அஜித் - போனி கபூர் - எச். வினோத் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக நீண்டநாட்களாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது போனி கபூர் அதை உறுதிசெய்துள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த போனி கபூர், ‘வலிமை’ படம், எச். வினோத், அஜித் ரசிகர்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அப்பேட்டியில் எச். வினோத்தை வெகுவாக பாராட்டிய போனி கபூர், 'தல 61' படத்திற்காக இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகதெரிவித்துள்ளார்.

இத்தகவலை அறிந்து உற்சாகமான அஜித் ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவருகின்றனர்.

ACTOR AJITHKUMAR Boney kapoor
இதையும் படியுங்கள்
Subscribe