போண்டாமணிக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவிய விஜய் சேதுபதி 

Bondamani treatment Vijay Sethupathi helped RS1 lakhS

இலங்கையை பூர்வீகமாக கொண்ட போண்டாமணி கடந்த 1991 ஆம்ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியான பவுனுபவுனுதான் என்ற படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சில படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் போண்டாமணி கடந்த மாதம் இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து நடிகர் பெஞ்சமின், போண்டாமணிக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்ததைஅடுத்துஅமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் நடிகர் வடிவேலு என்னால் இயன்ற உதவிகளை போண்டாமணிக்குசெய்வேன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, போண்டாமணியின்மருத்துவ உதவிக்கு ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இது குறித்துபேசிய போண்டாமணி, கேட்டவுடனேநடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் பணத்தை வங்கி எண்ணிற்கு போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் வடிவேலு தனக்கு உதவி செய்வதாக சொன்னதைகேட்டு பாதி குணமடைந்து விட்டேன்என்று கூறியுள்ளார். இதனிடையே நடிகர் மனோபாலாவும் மருத்துவமனைக்கு நேரில் சென்று போண்டாமணியைசந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

actor vijay sethupathi bonda mani
இதையும் படியுங்கள்
Subscribe