Advertisment

யோகி பாபுவுக்கு க்ளாப் அடித்த பா.ரஞ்சித்

csfvsa

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித், தனது 'நீலம் ப்ரொடக்சன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் தயாரித்த 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisment

இந்த நிலையில், நீலம் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் யாழி பிலிம்ஸ்ஸுடன் இணைந்து தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 'பொம்மை நாயகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் ஷான் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (22.01.2021) வெளியான நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. யோகிபாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி.எம்.குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவங்கி வைத்தார்.

Advertisment

yogi babu actor yogi babu Pa Ranjith bommai nayagi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe