
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ள பாம்பே ஜெயஸ்ரீ தற்போது பிரிட்டன் நாட்டிற்கு இசை கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள மருத்துவமனையில் இது தொடர்பாக சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
நேற்று இரவு கடுமையான கழுத்து வலி இருப்பதாக அங்கு இருப்பவர்களிடம் தெரிவித்துள்ளாராம். அதனால் அடுத்த நாளான இன்று அவரை பார்க்க சென்ற பொது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் திரையுலகினர் உள்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வரும் பாம்பே ஜெயஸ்ரீ 120க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் இவர் பாடிய 'வசீகரா...' (மின்னலே), 'மலர்களே மலர்களே...' (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்), 'ஒன்றா ரெண்டா...(காக்க காக்க), ''யாரோ மனதிலே...' (தாம் தூம்) உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.