Divya Bhatnagar

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகையான திவ்யா பட்நாகர் கரோனாவால் மரணமடைந்தார்.

Advertisment

'யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை', 'தேரா யார் ஹூன் மெயின்' ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் திவ்யா பட்நாகர். 34 வயதே நிரம்பிய இவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். உயர் ரத்த அழுத்தக் குறைபாடு இருந்த காரணத்தால், இவருக்கு சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் திவ்யா பட்நாகர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.