bollywood director

பாலிவுட்டைச் சேர்ந்த இயக்குனர் ரஜத் முகர்ஜி உடல்நலம் சரியில்லாத காரணத்தால் உயிர்ழந்திருப்பது பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

2002 ஆம் ஆண்டு மனோஜ் பாஜ்பாயி, விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான ‘ரோட்’ மற்றும் ‘ப்யார் துனே க்யா கியா’ ஆகிய படங்களை இயக்கியவர் ரஜத் முகர்ஜி.

கடந்த சில மாதங்களாக கிட்னி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ரஜத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது மனைவி அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ரஜத் முகர்ஜியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

Advertisment

ரஜத் முகர்ஜியின் உடல் ஜெய்ப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மனோஜ் பாஜ்பாயி, அனுபவ் சின்ஹா, ஊர்மிளா மடோன்ட்கர், ஹன்ஸல் மேத்தா ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ரஜத் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.