kangana rnaaut

தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கங்கனா ரனாவத். இவர் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இதனிடையே சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை தொடர்ந்து பல சர்ச்சைகளை ட்விட்டரில் எழுப்பி வந்தார். இதன்பின் மஹாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா கட்சியினருடன் மோதினார்.இதனால், கங்கனாவுக்கு இவ்வாறு மூக்கை நுழைத்து பிரச்சனையில் சிக்கி கொள்ளாதீர்கள் என்று கோரிக்கை வைத்தனர்.

Advertisment

இந்நிலையில் இவ்வாறு தெரிவிப்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், “தினமும் தொடர்ந்து என்னுடைய ட்வீட்களை வந்து பார்ப்பதால் சலிப்பு அல்லது சோர்வடையும் ரசிகர்கள் என்னை அமைதியாக இருக்கும்படி சொல்கிறார்கள். அவர்கள் என்னை ப்ளாக் செய்யலாம் அல்லது என்னைப் பின்தொடராமல் இருக்கலாம். அப்படிச் செய்யவில்லையென்றால் நிச்சயமாக நீங்கள் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். வெறுப்பாளர்கள் போல என்னை நேசிக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.