deepika

சுஷாந்த் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள் உருவாகியுள்ளன. அதில் ஒன்றுதான் பிரபலங்களுக்குள் இருக்கும் போதை பொருள் பழக்கம். சி.பி.ஐ மற்றும் என்.சி.பி பல பிரபலங்களை தொடர்புகொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரோபாரதி மற்றும் ரியாவின் சகோதரரை போதை பொருள் பயன்பாடு காரணமாக கைது செய்யப்பட்டு விசாரணை மெற்கொண்டுள்ளது போதை மருந்து தடுப்பு பிரிவு. மேலும், பலருடைய வாட்ஸ் அப் பதிவுகளை வைத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகை தீபிகாவுக்கும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கும் இடையே நடைபெற்ற வாட்ஸ் அப் உரையாடல் லீக்காகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையாடலில் தீபிகா தனது மேலாளரிடம் போதை வஸ்துவை கேட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

இந்நிலையில், தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷை போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.