இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் புகழ் பெற்ற நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவ். இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் உடல் நலம் மிகவும் மோசமடைந்துஅதன்காரணமாக மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ராஜு ஸ்ரீவஸ்தவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராஜு ஸ்ரீவஸ்தவ், 'மைனே பியார் கியா', 'பாசிகர்' உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் உத்தரபிரதேச திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.