Advertisment

வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள்...

பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர். இவர் கடந்த சனிக்கிழமை அன்று சில பாலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் வீடியோ ஒன்றை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

Advertisment

insta

இந்த பார்ட்டியில் தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், ஷாகித் கபூர், விக்கி கவுசல், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபல இந்தி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் நடிகைகள் அனைவரும் போதையில் இருப்பதுபோல இருப்பதாக இந்த வீடியோவை பார்த்தவர்கள் சமூக வலைதளத்தில் விமர்சிக்க தொடங்கினர். ஒருசிலர் அவர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்தியுள்ளனர். அதனால்தான் அந்த வீடியோவில் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்கினறனர்.

பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ மஞ்சிந்தர் சிங் சிர்ஸா வீடியோவை பகிர்ந்து “இதை பாருங்கள் இந்தி நடிகர், நடிகைகள் குடிபோதையில் திளைக்கிறார்கள். அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இதற்கு எதிராக எனது குரலை பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிலிந்த் டியோரா, “எனது மனைவியும், நானும் அந்த விருந்தில் கலந்துகொண்டோம். யாரும் போதை பொருள் பயன்படுத்தவில்லை. எனவே பொய்யான தகவலை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

deepika padukone Bollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe