Skip to main content

டீடோட்லர் வாழ்க்கை சிறந்ததா...? - அட்வைஸ் செய்யும் 'போதை ஏறி புத்தி மாறி'

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் மொத்த வாழ்க்கையையும் வேறொரு பாதைக்கு திசை திருப்புவதாக அமைவதுண்டு. போதைப் பழக்கம் நம்மில் பலருடைய நம்பிக்கைகளையும் கனவுகளையும் குறைத்து அவர்களுடைய வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. அப்படி ஒரு அத்தியாயத்தைப் பற்றி தான் 'போதை ஏறி புத்தி மாறி' திரைப்படம் பேசுகிறது.
 

bybm


ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க அறிமுக இயக்குனர் ஆர் சந்துரு இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் பல திருப்பங்களைக் கொண்ட திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் குறும்படங்கள் மூலம் பிரபலமான தீரஜ் படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
 

kanchana


மேலும் இதுகுறித்து இப்பட நாயகன் தீரஜ் பேசும்போது... திருமணத்திற்கு முதல் கொடுக்கும் பேச்சிலர் பார்ட்டியில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் பிரச்னை எப்படி திருமணத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கிறது என்பதே 'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் கதை. திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்ற மெசேஜை சொல்லியிருக்கிறோம். போதை என்றால் குடிபோதை மட்டுமல்ல நம் வாழ்வில் நாம் பல விஷயங்களுக்கு அடிமையாகியுள்ளோம் அதை கட்டுப்படுத்தினாலே பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். டிடோட்லர் வாழ்க்கை சிறந்தது என்பதை வலியுறுத்தியுள்ளோம். இத்திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்." என்றார்.

 

சார்ந்த செய்திகள்