Skip to main content

பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் என்ன? இந்தியன் 2 அப்டேட்... 

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

2.0 படத்தை தொடர்ந்து நடிகர் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கும் பணியை தொடங்கியுள்ளார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க மேலும், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 

bobby

 

 

ஷங்கர் இயக்கும் 14வது படமான இதை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிலையில் இப்படத்தில் நடத்து வரும் பாபி சிம்ஹா நவம்பர் 6ஆம் தேதி தனது 36வது பிறந்தநாளை இந்தியன் 2 குழுவினருடன் கொண்டாடினார். அதில், ஷங்கர் , விவேக், ஸ்டென்ட் மாஸ்டர் பீட்டர் மற்றும் பலர் கலந்துக்கொண்டர். கமல் தன்னுடைய பிறந்தநாளை கொண்டுவதற்காக தமிழகம் திரும்பியதால் மிஸ் ஆகியிருந்தார்.
 

miga miga avasaram


இந்நிலையில் பாபி சிம்ஹா இப்படத்தில் காவலராக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன்’ முதல் பாகத்தில் நெடுமுடி வேணு போலீஸாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜூன் மாதத்தை குறிவைத்த கமல்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kamal shankar indian 2 release update

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்பு படப்பிடிப்பு நடந்து வந்தது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பேர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டு பாக படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 

kamal shankar indian 2 release update

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புது போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

கமல்ஹாசன், இப்படத்தை தவிர்த்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார். மேலும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' மற்றும் அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் ஒரு படம், கைவசம் வைத்துள்ளார். ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார்.     

Next Story

பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா வழக்கு - அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
prakash raj, bobby simha case update

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆகஸ்ட் மாதம், வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் உரிய அனுமதியின்றி இடத்தை ஆக்கிரமித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரகாஷ் ராஜ், தனது பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலம் அல்லது அதற்கருகில் உள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்ததாக அக்கூட்டத்தில் புகார் எழுந்தது. மேலும் பாபி சிம்ஹா, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடிக் கட்டடம் கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு பிரகாஷ் ராஜ், அஞ்சுவீடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. பாபி சிம்ஹாவும் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.  

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிமுறைகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்பு வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. இருவரும் மேற்கொண்ட கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இப்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம், அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என வாதிட்டார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.