எஸ்.ஆர்.டி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சிவப்பு மஞ்சள் பச்சை நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார்.

vds

Advertisment

Advertisment

அதிரடி சண்டைக்காட்சிகளுடன் கூடிய வித்யாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்குகிறார். ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சுனில் எஸ்.கே ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற எடிட்டர் விவேக் ஹர்ஷன் இப்படத்தின் எடிட்டராக பொறுப்பேற்றுள்ளார். இன்று காலை நடைபெற்ற இதன் துவக்க விழாவில் படக்குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து வேகமாக நடைபெறுகிறது.