விக்ரமுடன் கைகோர்க்கும் பாபி சிம்ஹா!

bobby simha

‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள விக்ரம், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக 'சீயான் 60' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லலித் தயாரிக்கிறார். விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க, பிரபல சின்னத்திரை நடிகை வாணி போஜன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமை தொடங்கிய நிலையில், படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், சிறிய இடைவெளிக்குப் பிறகு பாபி சிம்ஹாவுடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது" என்றும்குறிப்பிட்டுள்ளார்.

actor vikram bobby simha
இதையும் படியுங்கள்
Subscribe