தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகரான சந்தீப் கிஷன், 'ரவுடி பேபி' என்ற தெலுங்கு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். கோனா வெங்கட் தயாரிக்கும் இப்படத்தை, ஜி.நாகேஸ்வர ரெட்டி இயக்க, செளராஷ்டா ராம் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு வில்லனாக நடிகர் பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை படத்தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் தொடங்கி முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது.