/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bobby-simha_3.jpg)
குறும்படங்களில் நடித்து, பின்பு நாயகனாக வளர்ந்தவர் பாபி சிம்ஹா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அமேசான் ப்ரைமில் வெளியான 'புத்தம் புதுக் காலை' என்னும் ஆந்தாலஜி படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பகுதியில் நாயகனாக நடித்திருந்தார், பாபி சிம்ஹா. கமல் நடிப்பில்ஷங்கர் இயக்கத்தில் உருவாகும், 'இந்தியன் 2' படத்திலும் பாபி சிம்ஹா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி சிம்ஹா. இந்தப் படத்தைப் பிரபல இயக்குனர் ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர் இயக்கவுள்ளார். இவர் பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்.
'அவள் அப்படித்தான்', 'பன்னீர் புஷ்பங்கள்', 'கடலோரக் கவிதைகள்', 'சீவலப்பேரி பாண்டி' உள்ளிட்ட பல படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் கே.ராஜேஷ்வர். அதுமட்டுமல்லாமல், 'அமரன்', உள்ளிட்ட பல படங்களை கே.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_19.png)
தற்போது மகன் விக்ரம் ராஜேஷ்வர் இயக்கும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை ராஜேஷ்வர் எழுதியுள்ளார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் ஜானரில் உருவாக்குகின்றனர். இந்தப் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அடுத்த வருட தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், பாபி சிம்ஹாவுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)