ஒத்துழைக்காத சிம்ஹா...ரெட் கார்டு வாங்குவாரா?

தயாரிப்பாளர் சங்கம் நடிகர் பாபி சிம்ஹா மீது ஒழுங்கு நடவடிக்கையாக ரெட் கார்டு போட திட்டமிட்டுள்ளது.

bobby simha

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சமீபத்தில் வெளியான அக்னி தேவி படத்தின் சர்ச்சை பெரும் சர்ச்சையாக தமிழ் சினிமா துறையில் வெடித்துள்ளது. தயாரிப்பு நிறுவனமும், பாபி சிம்ஹாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இப்பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாபி சிம்ஹா மற்றும் அக்னி தேவி தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இரு தரப்பிற்குமே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பாபி சிம்ஹா படக்குழு மீது போட்டுள்ள வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று தயாரிப்பு சங்கம் வலியுறுத்துள்ளது.ஆனால், பாபியோ அதற்கு ஒத்துவராமல், நான் இதை நீதிமன்றத்திலேயே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். இதனால் கடுப்பான தயாரிப்பு சங்கம், பாபி சிம்ஹா மீது ரெட் கார்டு போட்டால் என்ன என்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

agni dev bobby simha Tamil Film Producers Council
இதையும் படியுங்கள்
Subscribe