'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கி நடைபெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணம், கமல்ஹாசனுக்கு மேக்கப்பில் முழு திருப்தியில்லாததுதான் காரணம் என்று சிலர் சொல்லி வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bobby-simha_1.jpg)
இதையடுத்து கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார். மேலும் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் படத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்பட்டது.
தற்போது ஷங்கருக்கும், லைக்காவிற்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதால் 'இந்தியன் 2’ படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது சமுத்திரகனி மற்றும் நடிகர் விவேக் இப்படத்தில் நடிப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/336x150 sixer ad_22.jpg)
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இப்படத்தில் வில்லனாக யார் நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஜிகர்தண்டா படத்தில் சேதுவாக நடித்து நம்மை மிரள செய்த பாபி சிம்ஹாதான் கமலை எதிர்த்து வில்லனாக நடிக்கிறாராம். முதலில் பாலிவுட் நடிகர்களைதான் படக்குழு அணுகியதாம் ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக யாரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
Follow Us