சத்தியவானாக பாபி சிம்ஹா... அடுத்த அப்டேட்டை வெளியிட்ட 'விக்ரம்' படக்குழு

Bobby Simha act with vikram starring mahaan movie

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படம் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படம் குறித்தஅப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 'மகான்' படத்தில் நடிகர் பாபி சிம்ஹா சத்தியவான் என்ற கதாபாத்திரத்தில்நடித்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

actor vikram bobby simha dhruv vikram mahaan
இதையும் படியுங்கள்
Subscribe