‘தளபதி 69’; விஜய்யுடன் மோதும் வில்லன் நடிகர் 

bobby deol in vijay thalapathi 69 movie

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது கடைசி படமாக பார்க்கப்படும் ‘விஜய் 69’ படம் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க அ.வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டர் கடந்த மாதம் வெளியான நிலையில் ‘ஜனநாயகத்தின் ஒளி ஏற்றுபவர்’ என்ற வாசகம் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இதனால் இப்படம் அரசியல் கதைக்களத்தைக் கொண்டு உருவாகுவதாக கூறப்பட்டு வருகிறது.

இதையடுத்து இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட்டுகள் அடுத்த மூன்று நாட்களுக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் படி தற்போது முதலாவதாக இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் கமிட்டாகியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் விஜய்யுடன் முதல் முறையாக மோதவுள்ளார்.

bobby deol in vijay thalapathi 69 movie

பாலிவுட்டில் அனிமல் படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த பாபி தியோல், தற்போது தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து தற்போது இரண்டாவது தமிழ் படமாக விஜய்யின் 69வது படத்தில் நடிக்கவுள்ளார்.

actor vijay Bollywood Thalapathy 69
இதையும் படியுங்கள்
Subscribe