Bobby Balachandran's 'PDG Universal' is making a strong mark in the Tamil film industry.

உலகளாவிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபி பாலச்சந்திரன்- இவர் நிறுவனங்கள் தங்கள் தரவு தனி உரிமை, இணக்கப்பாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள வழக்கு அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவும் தீர்வுகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது 'பி டி ஜி யுனிவர்சல்' எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

Advertisment

பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இயக்குநர் அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் தமிழ் திகில் திரைப்படமான 'டிமான்டி காலனி 2' உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும், திரையுலகினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக பாபி பாலச்சந்திரன் பேசுகையில், ''டிமான்டி காலனி 2 இந்த தசாப்தத்தில் மிகவும் விரும்பப்படும் திகில் படமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். டிமான்டி காலனி ( 2015) யின் முதல் பாகத்தை விட பத்து மடங்கு சிறப்பாக வந்துள்ளது'' என்றார்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பாபி பாலச்சந்திரன்- அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உடனேயே தொழில் துறையில் ஈடுபட்டு வெற்றிகரமான வணிகத்தை நடத்தி வருகிறார். மேலும் அவர் தன்னை 'ஒரு தொழில் முனைவோர்' என்று கூறுகிறார்.

Advertisment

தனது பணியாளர்கள் பணி புரியும் விதத்தில் பல புதுமையான மாற்றங்களை செய்வதாக அறியப்படும் பாபி, மற்ற தொழில்களில் காணப்படும் சில சிறந்த நடைமுறைகளை இங்குள்ள பொழுதுபோக்கு துறையில் அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 'டிமான்டி காலனி 2' படத்தை தவிர்த்து, வேறு பல படைப்புகளையும் கைவசம் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.‌

'டிமான்டி காலனி 2' படத்திற்குப் பிறகு டாக்டர் மனோஜ் பெனோ தலைமையிலான பி டி ஜி யுனிவர்சல்.., மல்டி ஸ்டார்கள் நடிக்கும் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் வேலைகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்ட நிலையில், இன்னும் ஒரு வார கால படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது.இந்நிறுவனம் மேலும் சில படைப்புகளிலும் பணியாற்றி வருகிறது. அதற்கான விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.‌