ப்ளுசட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆன்டி இண்டியன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ப்ளுசட்டை மாறனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் ஆன்டி இண்டியன் திரைப்படம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தை பார்க்காமலேயே ப்ளூசட்டை மாறன் ரிவியூ செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து ப்ளுசட்டை மாறனிடம் கேட்கையில், "அது அவருடைய கருத்து. படம் பார்க்காமல் நான் எந்தப் படத்திற்கும் ரிவியூ செய்வதில்லை. இது பற்றி விரிவாக பேச நான் விரும்பவில்லை. இதற்கு முன்பு நிறைய படங்களுக்கு ரிவியூ செய்துள்ளேன். அதுபற்றியும் அவர் பேசினால் நன்றாக இருக்கும்" எனக் கூறினார்.