"ஒரு இயக்குநரா என்னால அதை ஏத்துக்க முடியல" - ப்ளூ சட்டை மாறன் பேச்சு!

Blue Sattai Maran

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிப்பில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. இப்படம் விரைவில் திரையங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரசாத் லேபில் நடைபெற்றது. இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி பாலா உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் பேசுகையில், "இந்தப் படத்துல ஜெயராஜ்னு நிஜமான ரவுடி ஒருத்தரை முக்கியமான வேடத்துல நடிக்க வச்சிருக்கேன். இந்தப் படத்தோட ட்ரெய்லர் வெளியான பிறகு அவருக்கு ஏழு படம் புக் ஆகிருக்கு. விஜய் டிவி புகழ் பாலா ஒருமுறை எதேச்சையாக என்னை சந்தித்தபோது வாய்ப்பு கேட்டிருந்தார். இந்தப் படத்துல அவருக்கு நல்ல கேரக்டர் ஒன்னு இருந்தது. அதனால அவரை கூப்பிட்டு நடிக்க வச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினம் லேட்டாவே வந்துக்கிட்டிருந்தாரு. ஏழு மணிக்கு வரச்சொன்னா எட்டு மணிக்கு வர்றாரேன்னு கடுப்பாகி, ‘தம்பி நீ பின்னால சிம்பு மாதிரி பெரிய ஆளா வருவ’ன்னு சொன்னேன். அவரை ஒன்பது மணிக்குத்தான் வரச் சொல்லியிருக்காங்க. ஆனால் அவரு எட்டு மணிக்கே வந்துருக்கார்னு அப்புறம்தான் தெரிஞ்சது,.

இந்தப் படத்துல ராதாரவி சார் நடிச்சாத்தான் நல்லா இருக்கும்னு அவருகிட்ட மூன்று கதை சொன்னேன். அவரும் ஒத்துக்கிட்டாரு.படம் பார்க்கிறதுக்கே லைவா இருக்கணுங்கிறதால அவரையும் இயல்பா காட்டணும்னு சில விஷயங்களைச் செய்யச் சொல்லி அவர்கிட்ட சொன்னேன். அதற்கு அவர், அப்படின்னா முதலிரவு காட்சியையும் அப்படித்தான் லைவா பண்ணுவியான்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்க, நான் ஷாக் ஆகிட்டேன்.

ஆனால் நான் சொன்னபடி நடிக்க ஒத்துக்கிட்டாரு. அதேசமயம் ஷூட்டிங் ஸ்பாட்டுல அவரோட வசனத்துல கரெக்சஷன்லாம் பண்ணினார். ஒரு இயக்குநரா என்னால அதை அப்படியே ஏத்துக்க முடியல. அதனால, ‘நீ சொன்ன மாதிரியும் எடுத்துக்க,நான் கரெக்சன் சொன்ன மாதிரியும் எடுத்துக்க. உனக்கு எது சரியாக படுதோ அதைப் பயன்படுத்திக்க’ன்னு சொன்னாரு. அவர் சொன்ன மாதிரி ரெண்டு விதமாவும் எடுத்துட்டு, படத்தை எடிட் பண்ணும்போது ரெண்டையுமே மிக்ஸ் பண்ணி பயன்படுத்தினேன். மிகவும் சிறப்பாக வந்திருக்கு. சென்னையில இருக்குற திறமையான கானா பாட்டு இளைஞர்களை இதுல நடிக்க வச்சிருக்கேன். ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்குப் பின்னாடி, இந்தப் படத்துல சின்னச்சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கிற நடிகர்கள்கூட ரசிகர்களால பெரிய அளவில் கவனிக்கப்படுவார்கள்” எனக் கூறினார்.

bluesattaimaran
இதையும் படியுங்கள்
Subscribe