tenet review

'டன்கிரிக்' படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கும் படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Advertisment

அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த படத்தின் கரு டைம் டிராவல் இல்லை. ஆனால், டைம் இன்வர்ஸ் என்ற அறிவியல் தியரியை வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக படத்தின் டீஸர் வெளியானபோது, 'டெனட்' படம் உலகம் முழுவதும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

ஆனால், கரோனா அச்சுறுத்தலால் மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியாக முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளானது டெனட் படக்குழு. தற்போதைய சூழ்நிலையிலும் உலகம் முழுக்க பல நாடுகளில் கரோனா பாதிப்பு குறையாமல் இருப்பதால் திரையரங்குகள் திறக்கப்பட்ட நாடுகளில் மட்டும் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிலும் முதலில் டெனட் படம் ரிலீஸாகாது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் டெனட் படக்குழு புது டிரைலரை வெளியிட்டது. அதில் செப்டம்பர் 3ஆம் தேதி ரிலீஸ், எங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் ரிலீஸ் என்று தெரிவித்தது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தவிர்த்து 70 நாடுகளில் டெனட் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் பைரசி ப்ரிண்ட் இணையத்தில் வெளியாகி, படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் டெனட் படம் இன்னும் பல நாடுகளில் வெளியாகவில்லை, குறிப்பாக பெரிய மார்க்கெட் உள்ள இந்தியாவிலும் வெளியாகவில்லை. அதற்கு முன்னதாக பைரசி ப்ரிண்ட் வெளியானால், வசூலில் பெரும் சரிவை காணலாம் என்று படக்குழு அச்சத்தில் உள்ளது. இந்நிலையில் பிரபல யூ-ட்யூப் சினிமா விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் டெனட் படம் குறித்து ரிவ்யூ வெளியிட்டுள்ளார். அதுவும் இந்தியாவில் இப்படம் ரிலீஸாகாத நிலையில் பைரசி ப்ரிண்டை பார்த்துதான் விமர்சித்துள்ளேன் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisment

tenet

வார்னர் ப்ரதர்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு நேரடியாக ட்விட்டர் பயணர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார். அதில் பைரசி வெர்சனை பார்த்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும், அந்த வீடியோ மீது சைபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள வார்னர் ப்ராஸ் நிறுவனம், விரைவில் சம்மந்தப்பட்டவர் மீது சைபர் போலீஸாருடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இரு மெயில்களின் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.