Advertisment

'முகத்தில் ரத்தக் கறை, கையில் டீ க்ளாஸ்' ; வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் பட போஸ்டர்

 'Blood stain on face, tea glass in hand'; Aishwarya Rajesh movie poster goes viral

'காக்கா முட்டை' படத்தின் மூலம் பலரின் கவனத்தை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'பூமிகா' படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனிடையே எஸ்.பி சௌதாரி தயாரிப்பில் 'டிரைவர் ஜமுனா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வத்திக்குச்சி படத்தை இயக்கிய கின்ஸ்லின் இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் முகத்தில் ரத்த கரையுடன் நின்று கொண்டு தேநீர் அருந்துவது போல் வெளிவந்திருக்கும் இப்போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஐஸ்வர்யா ராஜேஷ், 'மோகன்தாஸ்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெற்றிபெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ghibran aishwarya rajesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe