Advertisment

ஓடிடியில் சாதனை படைத்த பிரியா பவானி சங்கர் படம்!

blood money most watched ott

இயக்குநர் சர்ஜுன் கே.என்.இயக்கும் ‘ப்ளட் மணி' படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.கிஷோர், ஷிரிஷ், பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் தயாரிக்க, சதீஷ்ரகுநாதன் இசையமைத்திருந்த இப்படம் கடந்த மாதம் 24 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.

Advertisment

சமகாலத்தில் ஊடகங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ப்ளட் மணி திரைப்படம்ஜீ 5 ஓடிடி தளத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

Advertisment

Blood Money priya bhavani shankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe