Skip to main content

பிரபல நடிகர் காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி...

Published on 29/08/2020 | Edited on 29/08/2020
black panther

 

 

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்பிரஸ்: தி எர்னீ டேவிஸ் ஸ்டோரி என்னும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானவர் சாட்விக் போஸ்மேன். இதனை தொடர்ந்து அவர் நடித்த 42 என்னும் படம் நல்ல வரவேற்பை பெற, 2016ஆம் ஆண்டு சிவில் வார் என்னும் படத்தில் ப்ளாக் பேந்தராக நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். 

 

இதனால் அவரை மட்டும் சோலோவாக வைத்து ப்ளாக் பேந்தர் படத்தை 2017ஆம் ஆண்டு ரிலீஸ் செய்து வசூல் சாதனை படைத்தது. இதனிடையே கடந்த 2016ஆம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார் போஸ்மேன். ஆனால் தனக்கு புற்றுநோய் இருப்பது குறித்து வெளி உலகத்துக்கு அவர் அறிவிக்கவில்லை. சிகிச்சையின் நடுவே திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் புற்றுநோய் தீவிரமடைந்ததையடுத்து நேற்று (28.08.20) சாட்விக் போஸ்மேன் உயிரிழந்தார். இதனை அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அவருடைய மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மார்வெல் நிறுவனத்துடன் ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

Junior NTR meeting with Marvel studios

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்துள்ளது. இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.

 

இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருது, 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு வழங்கப்பட்டது. முன்னதாக ஜூனியர் என்.டி.ஆர் ஒரு பேட்டியில் "மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது" எனக் கூறியிருந்தார். 

 

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர், அமெரிக்காவில் உள்ள மார்வெல் ஸ்டுடியோவின் நிர்வாகி விக்டோரியா அலோன்சோவை சந்தித்துப் பேசியுள்ளார். இருவரும் சில நிமிடங்களே பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க ஏதேனும் வாய்ப்பு அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.  

 

 

Next Story

'மார்வெல் யுனிவர்ஸ்'-ல் ரஜினிகாந்த் பாடல்

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

Rajini's song in 'Marvel Universe'

 

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கும் மற்றும் கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2008-ஆம் ஆண்டு முதல் 'மார்வெல் காமிக்ஸ்'-ல் வரும் கதாபாத்திரங்களை வைத்து மிக பெரிய பொருட்செலவில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்-கள் தயாரித்து வருகின்றது. இவர்கள் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' திரைப்படம் மற்றும் 'மூன் நைட்' வெப் சீரிஸ் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

 

இந்நிலையில் மிஸ்.மார்வெல் கதாபாத்திரத்தை வைத்து உருவாகியுள்ள 'மிஸ்.மார்வெல்' மினி சீரிஸின் முதல் அத்தியாயம் நேற்று (08.06.2022) வெளியானது. இந்த முதல் அத்தியாயத்தின் டைட்டில் பாடலில் ரஜினிகாந்தின் 'லிங்கா' பட பாடல் சில நொடிகள் இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் 'லிங்கா' படத்தின் முதல் பாடலான 'ஓ...நண்பா' பாடலை இந்த சீரிஸில் பயன்படுத்தியுள்ளனர். இதற்காக இந்த சீரிஸின் எண்ட் கார்டில் 'ஏ.ஆர் ரஹ்மான், வைரமுத்து மற்றும் எஸ்.பி.பி இவர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளனர் 'மிஸ்.மார்வெல்' படக்குழு. 

 

'மார்வெல் ஸ்டுடியோஸ்' தயாரிப்பில் அடுத்ததாக 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.