சர்ச்சையான தீபிகா படுகோனே உடை; எச்சரிக்கும் பாஜக அமைச்சர்

BJP minister objects to Deepika Padukone costumes in pathaan movie song

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' அண்மையில் வெளியானது. படு கவர்ச்சியாக உடை அணிந்து தீபிகா படுகோனே நடனமாடியிருக்கும் இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக-வை சார்ந்த நரோட்டம் மிஸ்ரா, பதான் படத்தின் பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகளை மாற்றுமாறு பதான் தயாரிப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், "பேஷரம் ரங் பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் உடைகள் ஆட்சேபனைக்குரியதாக உள்ளது. இந்தப் பாடலைப் படமாக்கியதன் பின்னணியில் தவறான எண்ணங்கள் இருப்பதாகத்தெரிகிறது.

தீபிகா படுகோனே, ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் கூட 'துக்டே துக்டே கும்பலுக்கு' ஆதரவாக இருந்தார். அதனால்தான், பாடலின் காட்சிகளை மாற்ற வேண்டும், உடைகளை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் மத்தியப் பிரதேசத்தில் பதான் படத்தை வெளியிட தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்" எனக் கூறியுள்ளார். அடுத்த மாதம் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குநர் லீனாமணிமேகலையின் தமிழ் ஆவணப்படம் 'காளி' பட போஸ்டரில், இந்து கடவுளைத்தவறாகக் சித்தரித்துள்ளனர் என்று விமர்சித்தார். மேலும் பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படம் இந்து மத தெய்வங்களைத்தவறாகக் காட்சிப் படுத்தியிருந்ததால் அந்தக் காட்சியை அகற்ற வேண்டும் என நரோட்டம் மிஸ்ரா எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

deepika padukone narottam mishra sharukh khan
இதையும் படியுங்கள்
Subscribe