/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1389.jpg)
இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_12.jpg)
ஆர்.சி 15 படத்தில் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதால் படக்குழு ஹைதராபாத் சரூர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அப்போது திடீரென பள்ளிக்குள் பாஜகவை சேர்ந்த அகுலா ஸ்ரீவாணி என்பவர் தனது கட்சியினருடன் நுழைந்த ஆர்.சி 15 படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். பள்ளியில் படப்பிடிப்பு நடத்தினால் மாணவர்களின் படிப்பைப் பாதிக்கும் என்று கூறியுள்ளார். அத்துடன் அப்பள்ளியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்த தெலுங்கானா மாநிலத்தின் கல்வி துறை அமைச்சரையும் கடுமையாக சாடியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து படக்குழு படப்பிடிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)