/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/282_5.jpg)
பிரபல இயக்குநர்விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில்அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம்‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில்இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைகொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன. அதன் பின்பு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே கடந்த 11ஆம் தேதி இப்படம் வெளியானது.
மக்களிடையே கலவையான விமர்சனங்களைபெற்றாலும் பாஜக ஆளும்ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பாஜகவினர் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலரும்‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப்ரொமோட் செய்தும், கருத்து தெரிவித்தும்வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பாஜகவை சேர்ந்த எச். ராஜா ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"இந்த படத்தில் வரும் 2 வரிகளை நாம் கவனியாமல் கடந்து போக முடியாது. ஒன்றுமதம்மாறு, ஓடிப்போ, செத்துவிடு என்ற பயங்கரவாதிகளின் கோஷம். இரண்டாவதுகாஷ்மீரில் தங்களுக்கு எதிராக இவ்வளவு கொடுமைகள் நடந்தும் இந்துக்கள் ஆயுதம் ஏந்தினார்களா? காஷ்மீர் நிலைமை புரிந்து கொள்ள வைத்த வரிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் வரும் 2 வரிகளை நாம் கவனியாமல் கடந்து போக முடியாது.
1.Convert,run,die, மதம்மாறு, ஓடிப்போ, செத்துவிடு என்ற பயங்கரவாதிகளின் கோஷம்.
2.காஷ்மீரில் தங்களுக்கு எதிராக இவ்வளவு கொடுமைகள் நடந்தும் இந்துக்கள் ஆயுதம் ஏந்தினார்களா? காஷ்மீர் நிலைமை புரிந்து கொள்ள வைத்த வரிகள். pic.twitter.com/woqZTImys1
— H Raja (@HRajaBJP) March 16, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)