சூர்யா-கே.வி. ஆனந்த இணைந்து பணியாற்றியுள்ள படம் காப்பான். வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. கடந்த 21ஆம் தேதி இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த படத்தில் நடித்து முடித்தவுடன் சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
பாலிவுட் தயாரிப்பாளரான குனித் மொங்கா, இணை தயாரிப்பாளராக இப்படத்தில் இணைந்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் கிரேக்பவல் இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இணைந்துள்ளார்.
சூர்யாவுக்கு அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஹிந்தி நடிகர் பரேஷ் ராவல் வில்லனாக நடிக்க இணைந்துள்ளார். பாலிவுட்டில் 80 களில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவரான பரேஷ் ராவல் தேசிய விருது பெற்ற நடிகர். பாஜகவை சேர்ந்தவரான இவர், 2014-2019வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.