மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி பல கட்டங்களாக நடந்து கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் வெளியானது. படம் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் முழுப்படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘தீக்கொளுத்தி’ பாடல் லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில், ‘உன் நினைவைவிடக் கொந்தளிக்கும் பெருங்கடலில்லை. உயிர் தின்னும்
உன் சிரிப்பைவிட நான் பற்றியெரிய பெருநெருப்பில்லை’ என்ற மாரி செல்வராஜ் வரிகளுடன் தொடங்குகிறது. பின்பு சோகத்துடன் காணும் துருவ் விக்ரம், தன் காதலி அனுபமா பரமேஸ்வரனை நினைத்து பாடுகிறார். இருவரும் எந்தளவிற்கு காதலிக்கின்றனர் என்ற அன்பை குறிக்கும் வகையில் முத்தக் காட்சி இடம்பெறுகிறது. இடையில் அனுபமா பரமேஸ்வரனுக்கு வேறொருவருடன் திருமணம் நடப்பது போன்ற காட்சிகளும் இடம்பெறுகிறது. அந்த வேதனையில் காதலியின் பிரிவை நினைத்து துருவ் விக்ரம் பாடுவது போல் தெரிகிறது. இப்பாடலுக்கு மாரி செல்வராக வரிகள் எழுதியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னாவே பாடியுள்ளார். சாண்டி நடனம் அமைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/01/427-2025-09-01-19-13-57.jpg)