/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1200px-Shankar_at_the_2.0_Audio_launch.jpg)
1993ஆம் ஆண்டு 'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், இதுவரை 13 படங்களை இயக்கியிருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு மேலாக தனது பிரமாண்ட படங்கள் மூலம் வெற்றி பட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர் நேற்று (ஆகஸ்ட் 17) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு அவரின் சிஷ்யர்களான சிம்பு தேவன், வசந்த பாலன், அட்லீமற்றும் அறிவழகன் ஆகியோர் சமூகவலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டனர். அதில்...
அட்லீ - பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷங்கர் சார். நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு நம்பிக்கையாகவும், உத்வேகமாகவும் & எல்லாவுமாகவும் இருக்கிறீர்கள். ஐ லவ் யூ சார்.
சிம்பு தேவன் - அன்புள்ள ஷங்கர் சார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ??? உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்! ??❤️????
அறிவழகன் - ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு தேசத்துக்கும், முழு உலகத்துக்கும் கூட, இந்த ஆண்டு தடைகள், போராட்டங்கள் நிறைந்திருக்கிறது. நிச்சயமாக நாம் அதை வெல்வோம். என் இதயப்பூர்வமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புள்ள ஷங்கர் சார் & எங்களை இப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருங்கள் சார். என்றும் அன்புடன். #HappyBirthdayDirectorShankar.
வசந்த பாலன் - அன்புள்ள சார்! எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த இயக்குனர் நீங்கள். நீங்கள் தனித்துவமானவர், எனவே, உங்கள் படங்களும் அப்படியே. எனது மரியாதைக்குரிய குரு மற்றும் உண்மையான வழிகாட்டியான சங்கர் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் ஊக்கமளியுங்கள், சிரித்துக்கொண்டே இருங்கள் சங்கர் சார்" என பதிவிட்டுள்ளனர்.
Follow Us