/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Bindu-Madhavi-Stills-in-Pakka-Movie-_1_.jpg)
சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நடிகர் சிம்பு, விடிவி கணேஷ் மற்றும் தனது குடும்பத்தாருக்காக சமைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் விடிவி கணேஷ், “வருகின்ற மனைவிக்கு எந்த வேலையும் இல்லாமல் நீயே செய்துவிடுவாய் போல” என்று கிண்டலாக கேட்க, அதற்குப் பதிலளித்த சிம்பு, “வரப்போகும் எனது மனைவி என்ன வேலைக்காரியா? அவருக்குப் பிடித்தால் சமைக்கட்டும் இல்லை என்றால் பிடித்த வேலையை பார்க்கட்டும்” என்றார். தற்போது இந்த வீடியோ ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோ குறித்து நடிகை பிந்து மாதவி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...''சரியான அணுகுமுறை சிம்பு.. நாங்கள் அனைவரும் அவளை சந்திக்க காத்திருக்கிறோம்... # சிம்பு'' என பதிவிட்டுள்ளார்.
Right attitude sim ??? we all waiting to meet her.... #STR #simbu @strhere pic.twitter.com/g85o9MxLWV
Follow Us