Advertisment

பிக்பாஸ் 2 போட்டியாளர்களுக்கு பிந்து மாதவி கொடுத்த டிப்ஸ் 

bindhu madhavi

நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்தும் சில முன்னணி ஹீரோக்களுடன் நடித்த படங்கள் கொடுக்காத புகழ் சென்றஆண்டு தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் நடிகை பிந்து மாதவிக்கு கிடைத்தது. இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான இவர் தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்து வருகிறார்.

Advertisment

முழு அரசியல் படமாக உருவாகும் இப்படத்தையும், மற்றும் பிக்பாஸ் அனுபவங்கள் குறித்தும் நடிகை பிந்து மாதவி பேசியபோது.... "இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமாக இது அமையும். வாழ்க்கையில் ஒருமுறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே இருந்து விட்டேன். அதுபோதும். இன்னொரு தடவை அது நடக்காது. அப்படி வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனால் எப்போதாவது விருந்தாளி போல அழைத்தால் போகலாம். 'பிக்பாஸ் 2'வில் கலந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். கண்டிப்பாக ஜெயிக்கலாம்" என்று போட்டியாளர்களுக்கு நம்பிக்கை அளித்து பேசியுள்ளார்.

Advertisment
kamalhassan kamal bigboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe