கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி வீடியோக்களின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சில நடிகர்கள் வீட்டினில் தங்கள் குழுந்தகைகளுடன் விளையாடுவது,வீட்டைச் சுத்தம் செய்வது,சமையல் செய்வது, ரசிகர்களுடன் சமுகவலைத்தளத்தில் உரையாடுவது எனப் பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisment

gd

இந்நிலையில் நடிகை பிக்பாஸ் பிந்து மாதவி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.அதில் அவர் தன் காதல் அனுபவம் குறித்து பேசியபோது...''ஒருவர் மீது எனக்கு சீக்ரெட் கிரஷ் உள்ளது.அதை நான் யாரிடமும் சொன்னது கிடையாது.உடனே இதற்கு காதல் சாயம் பூசி,நானும் காதலிக்கிறேன் எனச் சொல்லிவிட முடியாது.இது ஒரு ஈர்ப்புதான். அதேபோல் நான் எந்த வித கமிட்மென்ட்டுக்கும் இன்னும் ஆளாகவில்லை.எனவே இப்போதைக்கு சிங்கிளாகவே இருக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.