Skip to main content

400 பேருக்கு தங்க மோதிரம் போட்ட விஜய்! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய டீம்!

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

அட்லி விஜய்யும் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, 'மேயாத மான்' இந்துஜா, சவுந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 

bigil

 

 

வருகின்ற தீபாவளிக்கு இப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் இப்படத்தின் கடைசி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்கிற பாடல் லீக் ஆனதை தொடர்ந்து படக்குழு யூ-ட்யூபில் வெளியிட்டது. தற்போது இப்பாடல் செம வைரலாகி வருகிறது.
 

அண்மையில் இப்படத்தில் நடித்து வந்த கதிர், தனது ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டார். 
 

இந்நிலையில் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்றுடன் நிறைவடைந்ததை முன்னிட்டு விஜய் தன்னுடன் பணியாற்றிய பிகில் படக்குழுவினர் 400 பேருக்கும் தங்க மோதிரத்தை பரிசளித்தார். தற்போது 95 சதவீத பிகில் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாகவும், விஜய் தற்போது டப்பிங்கை தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 130 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

முன்னதாக பைரவா படத்திலும் தன்னுடன் பணியாற்றியவர்களை கௌரவித்து தங்க செயின் பரிசளித்தார். மெர்சல் படத்தில் தங்க காசு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"செஞ்சுட்டா போச்சு..." ராயப்பனை கையிலெடுத்த அட்லீ

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

atlee directing new film bigil rayappan story

 

'ராஜாராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, அதில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

 

இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தில் வரும் ராயப்பன் காட்சியை பகிர்ந்து முழு திரைப்படமும் ராயப்பனை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த பதிவை பார்த்த இயக்குநர் அட்லீ "செஞ்சிட்டா போச்சு" என ரீட்வீட் செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் உற்சாகத்தில் உள்ளனர். அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணியை முடித்த பிறகு விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். ஒரு வேலை அந்த படம் ராயப்பனை பற்றிய படமா அல்லது வேறு ஒரு புதிய படத்தில் ராயப்பன் கதையை இயக்கவுள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

 

Next Story

'பிகில்' திரைப்பட பாடகி சங்கீதா சஜித் காலமானார்!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

 Playback singer Sangeetha Sajid passes away

 

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர்  பின்னணி பாடகி பாடகி சங்கீதா சஜித்.  சிறுநீரக பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த சங்கீதா சஜித் திருவனந்தபுரத்தில் அவரது சகோதரியுடன் வசித்து வந்த நிலையில் இன்று காலமானர். இன்று மாலை திருவனந்தபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

1996 ஆம் ஆண்டு வெளியான 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி ஹிட் அடித்த 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை' என்ற பாடலை சங்கீதா சஜித் பாடியுள்ளார். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பிகில்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெறித்தனம்' பாடலிலும் இன்ட்ரோ போர்ஷனை அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.