விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 63வது படமாகும். அட்லியுடன் இணைந்து மூன்றாவது படமாகும். ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கிறார்.

nayanthara

Advertisment

Advertisment

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர், போஸ்டர் வெளியிடப்பட்டது.

அதில் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்களும் தெரியவந்தது. பட ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை விஜய் குறித்தான தகவல்களே வெளியான நிலையில் நயன்தாரா குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்றால் நயன்தாரா இப்படத்தில் மருத்துவம் பயிலும் மாணவியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.