Published on 08/08/2020 | Edited on 08/08/2020

கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான படம் பிகில். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான இந்த மாபெரும் பட்ஜெட் படம் ரிலீஸாகி கலவையான விமரசனங்களை பெற்றது. ஆனாலும், வசூலை வாரிக்குவித்தது.
தற்போது உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. ஒருசில நாடுகளில் மீண்டும் சில நிபந்தனைகளுடன் திரையரங்கள் திறக்கப்படுகின்றன.
இதுபோல திறக்கப்படும் திரையரங்கங்களில் ஏற்கனவே கடந்த வருடம் ரிலீஸான படங்களை வெளியிடுகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூரில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் பிகில் படம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 10 மாதங்கள் ஆன நிலையிலும் படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.