விஜய் அட்லி கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிகில் படம் முன்னமே அதாவது 24ஆம் தேதி வெளியாக படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், சிலர் பிகில் படத்தை ஞாயிற்றுக்கிழமை 27ஆம் தேதியே வெளியிட திட்டமிட்டுள்ளதாக திடீரென சமூக வலைதளங்களில் வதந்தியை கிளப்பி வந்தனர்.

Advertisment

விஜய்

இந்த செய்தி காட்டுத்தீ போல பரவ தொடங்கியது. பலரும் ஞாயிற்றுக்கிழமை என்றால் அடுத்தடுத்து விடுமுறை இல்லாமல் படம் எப்படி வசூலில் சாதனை படைக்கும் என்று யோசிக்க தொடங்கிவிட்டனர்.

super duper

Advertisment

இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, பிகில் படம் சென்சாருக்கு சென்ற பிறகு ரிலீஸ் தேதியை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை இப்படம் குறித்து வெளியாகும் ரிலீஸ் தேதி மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று 6 மணிக்கு இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.