சர்ச்சை பிகில் போஸ்டர்... நடவடிக்கை எடுக்க வேண்டும்... மனு அளித்த வியாபாரி...

அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் பிகில். அண்மையில்தான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விஜய் பேசியது அவருடைய ரசிகர்கள் இன்றி பலரையும் கவர்ந்துள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

bigil poster

இந்நிலையில், நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு உக்கடம் புதிய மீன் மார்க்கெட்டை சேர்ந்த இறைச்சி வியாபாரி கோபால் என்பவர் கையில் பிகில் பட போஸ்டருடன் வந்திருந்தார். அவர் திடீரென்று விஜய் படத்தின் போஸ்டரை ஆக்ரஷோமாக கிழித்து எறிந்தார். இதனையடுத்து அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து கலெகடரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், “நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில், மீன், கறிக்கோழி, ஆட்டு இறைச்சியை வெட்டும் கட்டை மற்றும் கத்தி மீது நடிகர் விஜய் செருப்பு அணிந்த கால் வைத்திருப்பது போன்று உள்ளது. இது இறைச்சி வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

actor vijay bigil
இதையும் படியுங்கள்
Subscribe