Advertisment

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்... பிகில் படக்குழு அறிவிப்பு

மூன்றாவது முறையாக அட்லியும் விஜய்யும் இணைந்து பணி புரியும் படம் பிகில். இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

vijay

இதில் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொடர்ந்து விஜய் படத்தில் மூன்றாவது முறையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கிறார்.

Advertisment

இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு பிகில் படத்திலிருந்து ஒரு முக்கியமான அப்டேட் விடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவித்துள்ளார். மேலும் அந்த அப்டேடானது படத்தின் டீஸர் பற்றியோ, ட்ரைலர், ஆடியோ வெளியிடும் தேதி பற்றியோ இல்லை. அனைவரும் எதிர்பார்த்த வேறு ஒரு முக்கியமான அறிவிப்பை அறிவிக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதன் முதலாக விஜய் பாடுகிறார் என்றும். இதுதான் முதல் பாடல், தலைப்பு வெறித்தனம் என்றும் தெரிவித்துள்ளார். கடைசியாக விஜய் பைரவா படத்தில் குத்து பாடல் ஒன்றை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

bigil
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe