Advertisment

வெறித்தனம் பாடல் வெளியான நிலையில் டீஸர் வெளியீட்டிற்கு தயாராகும் பிகில் டீம்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்த படத்தின் ஷூட்டிங் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. விஜய்க்கான காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டு தற்போது டப்பிங் செய்து வருகிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை குறி வைத்து ரிலீஸ் செய்ய காத்திருக்கிறது படக்குழு.

Advertisment

vijay

இப்படத்தில் சிங்கப்பெண்ணே என்கிற பாடல் படக்குழு வெளியிடுவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் லீக் ஆனது. இதனால் உடனடியாக அந்த பாடலை படக்குழு வெளியிட்டது. ஏ.ஆர். ரஹ்மான், இசைக்கலைஞர்கள் வைத்து ஒரு ஆல்பம் போல இந்த பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது படக்குழு.

Advertisment

இதனையடுத்து பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள நடிகர் விஜய் முதன் முறையாக ரஹ்மான் இசையில் வெறித்தனம் என்ற ஒரு பாடலை பாட இருக்கிறார் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த பாடல் எப்படி இருக்கும் என்று பலரும் எதிர்ப்பார்த்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாடலை வெளியிட்டது படக்குழு. வெளியான 24 மணிநேரத்திலேயே 6 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளனர்.

alt="mahamuni" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6b7934c5-671b-453c-815f-fe05435d33d8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Mhamuni-336x150_2.jpg" />

இந்நிலையில் படக்குழு பிகில் படத்தின் டீஸர் கட் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் டீஸர் வெளியிடப்படும் என்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா, இந்த மாதம் முழுவதும் பிகில் அப்டேட்களாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

bigil
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe