Advertisment

நீ ஃபர்ஸ்ட்டா நான் ஃபர்ஸ்ட்டா... - பிகில் - கைதி தயாரிப்பாளர்கள் ஆடும் கேம்!

கோலிவுட்டில் வாரா வாரம் படங்கள் ரிலீஸாகிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பண்டிகையில் ரிலீஸாகும் படங்களுக்கு தனி மவுசுதான். அதுவும் தீபாவளி என்றால் கூடுதல் கொண்டாட்டம்தான். இந்த வருட தீபாவளிக்கு விஜய் நடிப்பில் பிகில் படமும் கார்த்தி நடிப்பில் கைதி படமும் ரிலீஸாக இருக்கின்றன.

Advertisment

bigil kaithi

இந்த அறிவிப்பை இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டன இரு நிறுவனங்களும். கடந்த இரண்டு மாதங்களாக வாரா வாரம் ஏதாவது அப்டேட்களை விட்டுக்கொண்டே வருகின்றன இரு தயாரிப்பு நிறுவனங்களும். ஆனால், ரிலீஸ் தேதி என்ன என்று சொல்ல மட்டும் தயக்கம் காட்டி வருகின்றன. பிகில் படம் தொடங்கப்படும்போது ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஆரம்பித்து தற்போது ரூ.180 கோடியை தாண்டி நிற்கிறதாம். இதனால் பிகில் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம், படம் தனியாக ரிலீஸானால்தான் வசூலில் வாரிக்குவித்து, லாபம் பெறும் என்று நம்புகிறதாம். அதனால் அது கைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அதன் அடிப்படையில் 'கைதி'க்கு முன்பாக ரிலீஸ் பண்ணலாம் என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறது.

Advertisment

ஆனால், ‘கைதி’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இன்னும் ரிலீஸ் தேதி எப்போது என்பதை அறிவிக்காமல் காலம் தாழ்த்தியே வருகிறார். இந்நிலையில் இன்று 'வாலு' படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியின் போட்டோவை நகைச்சுவையாகப் பதிவிட்டு, இன்று மாலை ஐந்து மணிக்கு 'கைதி' படத்தின் அப்டேட் வெளியாகிறது என்று அறிவித்துள்ளார். 'வாலு' படத்தின் புகழ்பெற்ற அந்த காமெடி காட்சியில் சந்தானமும் இன்னொருவரும் 'நான் இங்கயே நிக்கிறேன், நீ யார வேணா கூட்டிட்டு வா' என்று போட்டி போட்டு விடியும் வரை இருவரும் போகாமல் அங்கேயே நிற்பார்கள். அந்த புகைப்படத்தைப் பதிவிட்டதன் மூலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு தாமதமாவதை தானே நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருப்பதாக ரசிகர்கள் ரசிக்கின்றனர். அந்த அப்டேட் ரிலீஸ் தேதியாகத்தான் இருக்கும் என்று ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'பேட்ட' படமும், சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் 'விஸ்வாச'மும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாயின. அப்போது சன் பிக்சர்ஸ் மற்றும் விஸ்வாசத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ஆகியவை ட்விட்டரில் போட்டாபோட்டிக்கு பதிவிட்டு வந்தார்கள். இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடனும், சோசியல் மீடியா சண்டைகளுடன் படங்களின் ரிலீஸுக்காக வெயிட் செய்துகொண்டு இருந்தனர். அதே யுக்திதானா இது?

bigil kaithi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe