விஜய் - அட்லீ கூட்டணியில் உருவான மூன்றாவது படமான 'பிகில்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. ட்ரைலரை தற்போது வரை 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Advertisment

bigil

மேலும் 1.8 மில்லியன் லைக்குகள் பெற்று இந்தியாவிலேயே அதிக லைக்குகள் பெற்ற இரண்டாவது ட்ரைலர் என்ற சாதனையை படைத்துள்ளது. முதல் இடத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜீரோ' படத்தின் ட்ரைலர் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிந்திய மொழி படங்களிளிலேயே 'பிகில்' படத்தின் ட்ரைலர் அதிக லைக்குகளை பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.